டி.கோட்டம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி வழிபாடு
ADDED :4 days ago
பொள்ளாச்சி, டி.கோட்டம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி, டி.கோட்டம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை, உற்சவருக்கு திவ்ய திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. மதியம், தீபாராதனை, துளசி தீர்த்தம், சடாரி அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.