உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் லட்சுமி நாராயணருக்கு பவித்ரோத்சவம் விமரிசை

மாமல்லபுரம் லட்சுமி நாராயணருக்கு பவித்ரோத்சவம் விமரிசை

மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் விமரிசையாக நடந்தது. மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தோஷ பரிகார நிவர்த்தி கருதி, ஆண்டு தோறும் நடத்தப்படுவது வழக்கம்.  இந்தாண்டிற்கான உத்சவத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி, திருக்கல்யாணம் நடத்தி, ஒய்யாளி சேவையாற்றினர். நேற்று முன்தினம் மாலை, அங்குரார்ப்பணம், முதல்கால ஹோமம், வாஸ்து ஹோமம்,வேத திவ்விய பிரபந்தம் உள்ளிட்ட வழிபாட்டு சடங்குகள் நடந்தன. இன்று காலை, காலசாந்தி திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:40 மணிக்கு, மூலவர் லட்சுமி நாராயண பெருமாள், மகாலட்சுமி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள், அனுமன் ஆகிய சுவாமியருக்கு, புனித பவித்ரம் சாற்றப்பட்டு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !