உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் ஆவணி பவுர்ணமி வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்

சதுரகிரியில் ஆவணி பவுர்ணமி வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சன்னதியில் நடந்த பவுர்ணமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !