தென்திருமலை ஸ்ரீ வாரி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி கோவிலில், ஸ்ரீனிவாச சுவாமி மற்றும் புதிதாக அமைந்துள்ள பத்மாவதி தாயார் சன்னதிகளுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக, நேற்று 25 ஹோம குண்டங்களில் ஹோமம் நடந்தன. இன்று காலை புண்ணியாக வாஜனம், அக்னி பிரணயனம், கும்பாரதனை, விசேஷ ஹோமங்கள், வசுந்தரா ஹோமம், மகா பூர்ணாஹூதி, சாற்றுமறை, யாத்ர தானம், கும்ப பிரதக்ஷணம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து ஸ்ரீ மலையப்பசுவாமி, ஸ்ரீ தேவி, பூ தேவி, போக ஸ்ரீனிவாசர் புறப்பாடு உடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு பக்தி பரவசம் அடைந்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி குடும்பத்தினர் செய்திருந்தனர்.