உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமர விநாயகர் கோவிலில் சிறப்பு வேள்வி வழிபாடு

அரசமர விநாயகர் கோவிலில் சிறப்பு வேள்வி வழிபாடு

அன்னூர்: நல்லிசெட்டிபாளையம், பழமையான அரச மர விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது.


நல்லிசெட்டிபாளையத்தில் உள்ள பழமையான அரசமர விநாயகர், கருப்பராயர் சுவாமி, கன்னிமார் அம்மன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் முழுவதும் வர்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த 26ம் தேதி மாலை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு முளைப்பாலிகை எடுத்து வந்தனர். இரவு விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், பூர்வாங்க பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில், மகா கணபதி ஹோமமும், மூல மந்திரஹோமமும் நடந்தது. காலை 7:45 மணிக்கு அரச மர விநாயகர், கருப்பராயர் சாமி, கன்னிமார் அம்மன் ஆகியோருக்கு சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குருமூர்த்தி சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி ஏற்பாடு செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !