உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உசிலம்பட்டி சடையாண்டி, தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி சடையாண்டி, தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை; உசிலம்பட்டி அருகே  சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னூத்துப்பட்டி  கிராமத்தில் பழமையான அருள்மிகு சடையாண்டி மற்றும் தொட்டிச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று 12 ஆண்டுகளுக்குப் பின்பு  யாகசாலையில்  கணபதி ஓமத்துடன் துவங்கி, முக்தி ஓமம், ஐந்தீ வேட்டல் யாகம், கருமுறை பூஜை, நடைபெற்று மங்கல இசை முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.,  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் புனித நீர் தெளிக்கப்பட்டது., தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சடையாண்டிசாமி மற்றும்  தொட்டிச்சி அம்மன்  பீடங்களுக்கு பால்,தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !