உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோருக்காக காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

 நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோருக்காக காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

காஞ்சிபுரம்: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.


திபெத்தில் நேற்று மு ன்தினம் பனிப்பாறை உருகி, அங்குள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, அதிகளவு நீர் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் கலந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் பேரழிவில், 353 பேர் பலியாகினர். 57 தமிழர்கள், 133 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, காஞ்சி மாடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், அருளாசியின்படி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்ல் கிழக்கு ராஜகோ புரத்தில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !