உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவருக்கு புனித ராக்கி சமர்ப்பித்து பரவசம்

வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவருக்கு புனித ராக்கி சமர்ப்பித்து பரவசம்

வாரணாசி, உத்தரப் பிரதேசம்: ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகத் திகழும் புனிதமான ராக்கி மங்கள ஆரத்தியின்போது ஸ்ரீ விஸ்வேஸ்வரருக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.


ரக்ஷாஎன்றால் "பாதுகாப்பு தரும் கயிறு. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். வாரணாசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலின் மூலவரான ஸ்ரீ விஸ்வேஸ்வரருக்கு மங்கள ஆரத்தியின்போது புனிதமான ராக்கி சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம், வாரணாசியில் ரக்ஷா பந்தன் பண்டிகையின் உணர்வு வெளிப்பட்டது. இந்த மங்களகரமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக இந்த வழிபாட்டுச் சடங்கு நடைபெற்றது. பக்தர்கள் இக்கோயிலில் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்வைக் கண்டு தரிசித்தது, புனித நகரமான வாரணாசியில் நடைபெறும் பண்டிகைக் கொண்டாட்டங்களில் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !