நேபாளத்தில் நடந்த இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தோருக்காக மோட்ச தீபம்
ADDED :2 days ago
வத்தலக்குண்டு: அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தா மகராஜ் சுவாமிகள் தலைமையில் சிவயோகி ஸ்ரீ நிவாச்சாரியார் முன்னிலையில் எழுவனம்பட்டி, சத்யா கிரக சேவாஸ்ரமத்தில் நேபாளில் நடந்த இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தோர் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மவுன அஞ்சலியும், மிருத்யுஞ்சய மகா மந்திரமும் ஜெபிக்கப்பட்டது. இதில் அனைத்து இந்து அமைப்புக்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.