காரமடை குரு ராகவேந்திரர் கோவிலில் 355 வது ஆராதனை விழா
ADDED :7 days ago
காரமடை: காரமடை குரு ராகவேந்திரர் கோவிலில், குரு ராகவேந்தரின், 355 வது ஆராதனை விழா நடந்தது.
காரமடை கோவை சாலையில், ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ குரு ராகவேந்திரர் கோவில் உள்ளது. இங்கு குரு ராகவேந்தரின், 355வது ஆராதனை விழா மற்றும் 12ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. காலையில் கோவில் நடை திறந்து மங்கள இசை, சுப்ரபாதம் பாடப்பட்டது. ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவன பிரவேச தினத்தை முன்னிட்டு, நேற்று அபிஷேகம், அலங்கார பூஜை ஆகியவை நடந்தன. காலை, 9:00 மணிக்கு குரு ஸ்தோத்ர பாராயணம் சேவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலர் அர்ச்சனையும், மங்கள ஆரத்தியும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தாசபளஞ்சிக மகாஜன திருப்பாவை வழிபாட்டுக் குழுவும், இளைஞர் சங்கமும் இணைந்து பஜனை நடத்தினர்.