உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காக்கநல்லுார் பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

காக்கநல்லுார் பெரியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

உத்திரமேரூர்: காக்கநல்லுாரில் அமைந்துள்ள பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோவிலில் 11ம் ஆண்டு திருவிழாவில், திருக்கல்யாணம் விமரிசையாக நேற்று நடைபெற்றது.


உத்திரமேரூர் அடுத்த, காக்கநல்லுார் கிராமத்தில் பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 11ம் ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று காலை 8:30 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம், காலை 10:30 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு பெரியாண்டவருக்கு திருக்கல்யாணம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் திருக்கல்யாணத்தை பார்த்தனர். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !