வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு
ADDED :1 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மழை வேண்டி நடந்த யாக பூஜையை தாடிக்கொம்பு ஜெகநாதன் குருக்கள் குழுவினர் நடத்தினர். மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தேங்காயில் தீபமேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. சின்னாளபட்டி: காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடையில் உள்ள தண்டினி வாராஹி அம்மன் கோயிலில் திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.