உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை முருகனுக்கு மந்திர புஷ்ப அர்ச்சனை

வல்லக்கோட்டை முருகனுக்கு மந்திர புஷ்ப அர்ச்சனை

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆவணி மாத மூன்றாம் செவ்வாய்க்கிழமையான நேற்று, மந்திர புஷ்ப அர்ச்சனை நடந்ததையடுத்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் – முருகன் அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில், ஆவணி மாத மூன்றாம் செவ்வாய்க்கிழமையான நேற்று, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுது. தொடர்ந்து, தாமரை, சாமந்தி, ரோஜா, வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அதேபோல, சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு மந்திர புஷ்ப அர்ச்சனை நடந்தது. பின், சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !