உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் அர்ச்சகர்களால் சிறப்பு அபிஷேகங்கள் பல்வேறு சுகந்த திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், சுவாமிக்கு பஞ்சாமிர்தம்  சாஸ்திரங்களின்படி சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் ஆரத்தி சடங்குகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை தரிசித்து, தீர்த்த பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !