உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திலி பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை சிறப்பு அபிஷேகம்

இந்திலி பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை சிறப்பு அபிஷேகம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த  இந்திலி பாலமுருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை நாளில் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் இன்று ஆவணி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பாலமுருகன் சுவாமிக்கு பல திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சத்ரு சமஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !