உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா விமரிசை

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா விமரிசை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிருத்திகை விழா இன்று விமரிசையாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிருத்திகை விழா நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சரவண பொய்கையில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து கந்தபெருமானை வழிபட்டனர். காவடி எடுத்தல், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் என, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !