கீழக்கரையில் குபேர பகவானுக்கு தனி சன்னதி; வியாழன் தோறும் சிறப்பு பூஜை
ADDED :1 days ago
கீழக்கரை: செல்வத்தின் அதிபதியான குபேர பகவானை வீட்டின் பூஜை அறையில் வடக்கு நோக்கி வைத்து குபேர பூஜை செய்வது வழக்கம். இந்நிலையில் குபேர பகவானுக்கென தனியாக சன்னதி வைத்து வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசுவாமி கோயிலில் குபேரருக்கு தனி சன்னதி அமைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மகாலட்சுமி மற்றும் குபேரர் அவரது மனைவி சித்திரலேகா ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை தோறும் நடக்கிறது. குபேரருக்கு பிடித்த அவலுடன் சிறிது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நெய்வேத்தியம் செய்து நெல்லிக்கனி வைக்கப்படுகிறது. குபேர மந்திரம் உச்சரித்து பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.