உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கார வேலன் கோவிலில் தீபம் ஏற்ற இரும்பு மேஜை அமைப்பு

சிங்கார வேலன் கோவிலில் தீபம் ஏற்ற இரும்பு மேஜை அமைப்பு

சிங்கபெருமாள் கோவில்: நம் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, சிங்கை சிங்கார வேலன் கோவிலில், நெய் தீபம் ஏற்ற தனியாக இரும்பு மேஜை அமைக்கப்பட்டுள்ளது.


சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, ரயில்வே ஸ்டேஷன் சாலையோரம் பழமையான சிங்கை சிங்கார வேலன் கோவில் உள்ளது. இங்கு ஆடி கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், அதிகளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். அப்போது, தரையில் வைத்து தீபம் ஏற்றுவதால், பக்தர்களின் ஆடைகளில் விளக்கில் உள்ள நெருப்பு பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கோவில் நிர்வாகம் சார்பில் நெய் தீபம் ஏற்ற இரும்பிலான மேஜை அமைக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !