உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா

வரதராஜ பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அருள் பாலிக்கும் சீனிவாச பெருமாள் தாயாருடன் சேஷ வாகனத்தில் உலா வந்தார். கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் அலர்மேலுமங்கா, பத்மாவதி சமேத சீனிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. ஆதிமூர்த்தியான பெருமாள் இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் பராமபத நாதனாக வீற்றிருந்தார். அப்போது இரண்டு தாயார்களுடன் வீற்றிருந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !