உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பால், தயிர், வெண்ணெய், நெய், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நைவேத்யமாக படைக்கப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கிருஷ்ணரை வழிபட்டு, தங்களது குடும்ப நலன், குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலில் கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றது பக்தர்களை கவர்ந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராஜசிம்மன் செய்திருந்தார். விழாவில் நத்தம்,சாணார்பட்டி, திண்டுக்கல், செந்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !