உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டமங்கலம் பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

கண்டமங்கலம் பச்சைவாழி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம்–பாக்கம் ஊராட்சிகளுக்கு நடுவே கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா, நேற்று நடந்தது.


விழாவையொட்டி, காலை 7;00 மணி முதல் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12;00 மணிக்குமேல் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு முருகர், வள்ளி–தெய்வானை சுவாமிகள் மேள தாளங்கள் முழங்க அங்குள்ள தீர்த்த குளத்திற்கு சென்று, கரகம் ஜோடித்து, அங்கிருந்து அக்னி சட்டியுடன் காப்பு கட்டிய பக்தர்கள் புடைசூழ சுவாமிகள் ஊர்வலமாக சென்று கோவிலை சுற்றி வந்து, தீ குண்டத்தில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து தீமிதி திருவிழா நடந்தது. இதில் காப்பு கட்டிய ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன், தலைவர் வேணுகோபால், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !