அச்சிறுபாக்கம் கடமலைபுத்துாரில் உறியடி திருவிழா
ADDED :12 hours ago
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே கடமலைபுத்துாரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூதேவி, ஸ்ரீதேவி – சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கடமலைப்புத்துார் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று உறியடி திருவிழா நடந்தது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து நடந்த உறியடி திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக வந்த கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.