உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேந்தல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை

புத்தேந்தல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடந்தது. யாதவ சங்க தலைவர் ஆழி அருள்தாசன் வரவேற்றார்.

வழுக்கு மரம் ஏறுதல் போட்டியில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து உரியடி, மஞ்சள் நீராட்டு விழா, கண்ணபிரான் வீதி உலா, தேரோட்டம் நடந்தது. யாதவ சங்க இளைஞரணி தலைவர் குகன் நன்றி தெரிவித்தார்.

ரெகுநாதபுரம்: பருத்திக்காட்டு வலசையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள்நடந்தது. சிறுவர் சிறுமியர்களின் தடகளம், குழு விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் ஊர்வலமாக உற்ஸவர் கொண்டு செல்லப்பட்டார். ஏற்பாடுகளை வீரன் அழகு முத்துக்கோன் இளைஞர் பேரவையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !