சோழவந்தானில் கிருஷ்ண ஜெயந்தி
சோழவந்தான்: சோழவந்தான் பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென்கரை ருக்மணி சத்யபாமா நவநீதகிருஷ்ணன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன.
குழந்தை கிருஷ்ணரை தொட்டிலிடும் வைபவம் நடந்தது. கோலாட்டம்,பஜனை வழிபாடுகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் பாலாஜி தலைமையில் பூஜைகள் நடந்தன. கிருஷ்ணமூர்த்தி, வேங்கடரமணன், தண்டபாணி, கருப்பதேவன், விஸ்வநாதன், ஹரி உட்பட பலர் பங்கேற்றனர்.
சோழவந்தான் கொண்டல்ராயரவுத் நவநீதகிருஷ்ண பஜனை மடத்தில் நடந்த விழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பஜனை குழுவினர் பாடல்கள் பாடி கிருஷ்ணன் வேடமணிந்தவர்களுடன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்தனர். மடத்தின் முன் உறியடி நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் கார்த்திகேயன், செயலாளர் குப்புராஜ், பொருளாளர் பாண்டியராஜன், செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், பஜனை குழுவினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.
முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீட விழாவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வேத பாராயணம் நடந்தன. விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி பஜனை மாணவர்கள் பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். பள்ளிச்செயலாளர் சுவாமி பரமானந்தா குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார். வெங்கட்ராமன் பூஜை செய்தார். நிர்வாகி ஸ்ரீகுமார், ஆசிரியர்கள் வீரமணிகண்டன், முத்துப்பாண்டி ஏற்பாடுகளைச் செய்தனர்.