சமுத்திராப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
ADDED :17 hours ago
நத்தம்; நத்தம் அருகே சமுத்திராபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஊர் மந்தையில் கண் திறக்கபட்டு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தல், கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் பரிவார தெய்வங்களோடு பட்டத்தரசி அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.