ஏரி கருப்பராயன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ADDED :1 hours ago
அவிநாசி: கருமாபாளையம் ஏரி கருப்பராயன், கன்னிமார், மகாமுனி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடை பெற்றது.
கடந்த 25-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கருப்பராயனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.