கோயில் திருவிழாவில் பாரம்பரிய படுகள பூஜை, கழுமரம் ஏறும் நிகழ்ச்சி: களைகட்டிய முத்தாலம்மன் கோயில் திருவிழா
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா அடியனுாத்து ஊராட்சி வாழைக்காய்பட்டியில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணித் திருவிழா செப்.,1ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. செப்.,6ல் கழுமரம் வெட்ட செல்லும் நிகழ்வு நடந்தது.
செப்.,8 காலை அய்யனார் கோயிலுக்கு அம்மன் உட்பட சாமி சிலைகளை கொண்டு சென்று அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தேவராட்டம், வானவேடிக்கை, விளையாட்டு போட்டிகள் நடந்தன.
செப்.,9 காலை பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாரம்பரிய தடி விளையாட்டு, கோலாட்டங்கள் நடந்தன. உள்ளூர் பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இரவு வள்ளி திருமணம் புராண நாடகம் நடந்தது.
நேற்று முக்கிய நிகழ்வான ஏழு வளரிளம் பெண்கள் பங்கேற்கும் படுகள பூஜைகள் கோயில் முன் நடந்தது.
மாலை 42 உயர 2 கழுமரங்களில் வாழைக்காய்பட்டி வீரர்கள், 16 அடி உயர கழுமரத்தில் உருமிக்காரன்பட்டி வீரர்கள் ஏறி காணிக்கை முடியை கைப்பற்றினர். ஆயிரக்கணக்கானார் கண்டு ரசித்தனர். பின்னர் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வும், இரவு இன்னிசை கச்சேரியுடன் விழா நிறைவு பெற்றது.