திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தேசிகர் சுவாமிக்கு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று (14ம் தேதி) காலை 7:00 மணிக்கு தங்க பல்லக்கில் வீதியுலா, இரவு 8:00 மணிக்கு தங்க விமானத்தில் வீதியுலா நடக்கிறது. தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது.
வரும் 21ம் தேதி காலை 6:00 மணிக்கு தேசிகர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து தேர் திருவிழா நடக்கிறது. 22ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு ரத்தனாங்கி சேவை, 7:00 மணிக்கு மங்களாசாசனம், 10:00 மணிக்கு வீதியுலா, தீர்த்தவாரி, தேவநாத பெருமாள், தாயார், தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து சாற்றுமுறை நடக் கிறது.