குன்னூர் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED :2 days ago
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் கற்பக விநாயகர் கோவிலில் 35-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டியில் 101 பெண்கள் அழகிய வண்ண கோலங்கள் இட்டனர். கடவுள் வேடமணிந்து மழலைகள் பங்கேற்ற மாறுவேட போட்டியில் விநாயகர், முருகர், கருப்பசாமி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் வேடமிட்டு நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. .மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து சமுதாய மக்களும் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து பெண்களுக்கான இசை நாற்காலி, ஓவியம் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றன.