ஒரு முறை கும்பாபிஷேகம் தரிசித்தால் 12 ஆண்டுகள் வழிபட்ட பலன் கிடைக்கும்! நேரில் செல்ல முடியவில்லை.. இதை செய்யுங்க..!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை கும்பாபிஷேகம் தரிசித்தால் 12 ஆண்டுகள் தொடர்ந்து தினமும் கோயிலில் வழிபட்ட பலன் கிடைக்கும். நாளை (17 ம்தேதி) அன்னை மீனாட்சி கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. இன்று கும்பாபிஷேகம் தரிசிக்க கோடி புண்ணியத்துடன் 17 ஆண்டுகள் கோவிலில் வழிபட்ட பலன் கிடைக்கும். நேரில் சென்று காண முடியாதவர்கள், பிற ஊர்களில் இருப்பவர்களும் அந்த பலனை பெறுலாம். வீட்டில் அம்மனை நினைத்து ஒரு விளக்கேற்றி கும்பாபிஷேக நிகழ்வை டீவி அல்லது நேரலையில் பார்த்து மனதார வேண்டுங்க. நம் வீட்டு பிள்ளையான அன்னை மீனாட்சி பிரார்த்தனை அனைத்தையும் நிறைவேற்றுவாள். இன்று அங்கையற்கண்ணியை வழிபடுவோம்.. மீனாட்சி சொக்கரின் அருளை பெறுவோம்!
கும்பாபிஷேகம் நேரலையில் காண https://temple.dinamalar.com/meenakshi/kumbabishekam/live/ லிங்கை கிளிக் செய்யுங்க.