மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில், திருக்கல்யாண வைபவமும், திருவிழாவும் நடந்தது.
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 58ம் ஆண்டு விழா கடந்த எட்டாம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 13ம் தேதி முனியப்பன் பூஜையும், கிராம சாந்தியும் நடந்தது. 15ம் தேதி இரவு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், பால்குடம், பூங்கரகம் ஆகியவற்றை எடுத்து வந்தனர். இன்று காலை மதுரை வீரன் சுவாமி அழைப்பு வெகு விமரிசையாக நடந்தது. இதை அடுத்து பொங்கல் வைத்து பூஜை செய்தனர். பின்பு பட்டத்தரசி அம்மனுக்கும், பட்டீஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து, பூஜை செய்தனர். நாளை மஞ்சள் நீராட்டும் விழாவும், மறு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.