நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செல்வந்தர் ஒருவரிடம், 'நாங்கள் வசிக்கும் வீடு சிறியதாக உள்ளது. அதை பெரிதாக மாற்ற கடன் கொடுங்கள்' எனக் கேட்டனர் ஒரு தம்பதியினர். 'பழைய கடனையே இன்னும் தரவில்லையே... உங்கள் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்'' எனக் கேட்டார் செல்வந்தர். 'இரண்டு மகன்களும், நான்கு ஆடுகளும் உள்ளன'' என்றனர்.
'' இன்று முதல் வீட்டின் உள்ளேயே ஆடுகளை கட்டுங்கள். இரண்டு நாள் கழித்து வாருங்கள்'' என்றார் செல்வந்தர். மீண்டும் அவரைச் சந்தித்த போது, ''இன்று முதல் ஆடுகளை தொழுவத்தில் கட்டுங்கள். இரண்டு நாட்கள் கழித்து சந்திப்போம்'' என அனுப்பி வைத்தார். தொழுவத்திற்கு ஆடுகள் சென்ற பிறகு வீடு போதுமானதாக இருப்பதை உணர்ந்தனர். செல்வந்தரிடம் இதைத் தெரிவித்த போது, ''பார்த்தீர்களா... இருப்பதை கொண்டு வாழ்ந்தால் கடன் வாங்க தேவையில்லை'' என்றார்.