/
போட்டோ
போட்டோ

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தென்காசி மாவட்டம் மேக்கரை அச்சன்கோவில் சாலையில் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் வாகனங்கள்.

காமன்வெல்த் விளையாட்டு தடகளத்தின் டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை நீளம் தாண்டுதல்) அசத்திய தமிழக வீரர்களின் பிரவீன் சித்ரவேல் (வெள்ளி), செல்வ பிரபு திருமாறன் (வெண்கலம்) பதக்கம் வென்றனர். இடம்: கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து.

வட மாநிலங்களில் கங்கை நதிக்கு நடைபயணமாக சென்று அங்கிருந்து புனித நீரை காவடியில் சுமந்து வந்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வது கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது; அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் காவடியின் ஒருபுறத்தில் தன் மகளை சுமந்து சென்றார். இடம்; மீரட், உத்தரபிரதேசம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement
Advertisement

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது