நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகப்போர் உருவான நேரம்.  பகை நாடுகள் குண்டு மழை பொழிந்ததால் அழிவு ஏற்படும் நிலை உருவானது.  இதில் இருந்து மக்கள் தப்பிக்க  அவரவர் வீடுகளில் மறைவிடம் ஒன்றை உருவாக்கினார் கட்டட நிபுணர் ஒருவர். 
இது பற்றி போதகரிடம் தெரிவித்த போது, 'மனதில்  உருவாகும் பொய், பொறாமை, வஞ்சகம் போன்ற  குண்டுகளிடம் அகப்படாமல் இருக்க, பாதுகாப்பான மறைவிடம் ஒன்று உள்ளது. அதுதான் ஜெபம். தினமும் செய்தால் நம்மை காத்துக் கொள்ள முடியும். ஆனாலும் மக்களுக்காக நீ உருவாக்கிய மறைவிடமும் தேவையானதுதான்' என பாராட்டினார்.

