sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.9 தை 26: தை அமாவாசை. திருவோண விரதம். திருவள்ளூர் வீரராகவர் காலை சூர்ணாபிஷேகம். மதுரை மீனாட்சியம்மன் வைரகிரீடம். திருநெல்வேலி, தென்காசி, சங்கரநயினார் கோயில் இத்தலங்களில் லட்ச தீபக்காட்சி. கல்லிடைக்குறிச்சி, திருமொச்சியூர், சூரியனார் கோயில் இத்தலங்களில் சிவபெருமான் பவனி.

பிப்.10 தை 27: வேதாரண்யம் சிவபெருமான் பவனி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.

பிப்.11 தை 28: முகூர்த்த நாள். சந்திர தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். அப்பூதி நாயனார் குருபூஜை.

பிப்.12 தை 29: திருமயம் ஆண்டாள் உச்சிக்கொண்ட கூடாரைவல்லி உற்ஸவம். திருவள்ளூர் வீரராகவர் தீர்த்தவாரி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை. அஹோபிலமடம் 6வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

பிப்.13 மாசி 1: விஷ்ணுபதி புண்ணியகாலம். முகுந்த, வரசதுர்த்தி விரதம். கோயம்புத்துார் கோனியம்மன் பூச்சாற்று விழா. திருப்பதி பெருமாள் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்.

பிப்.14 மாசி 2: வஸந்த பஞ்சமி. திருச்செந்துார், பெருவயல் முருகப்பெருமான் உற்ஸவம் ஆரம்பம். மதுரை கூடலழகர் ராஜாங்க சேவை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் புறப்பாடு.

பிப்.15 மாசி 3: சஷ்டி விரதம். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள், திருத்தணி, காங்கேயம், திருப்போரூர் முருகப்பெருமான் மதுரை இம்மையிலும் நன்மை தருவார், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் இத்தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். திருவொற்றியூர், விருத்தாச்சலம் தலங்களில் சிவபெருமான் பவனி.




    • Dinamalar Events


    Dinamalar