
ஏப்.26 சித்திரை 13: முகூர்த்த நாள். அழகர்கோவில் கள்ளழகர் மலைக்குப் புறப்பாடு. சோளசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று. வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை. திருத்தணி முருகப்பெருமான் கிளிவாகனம்.
ஏப்.27 சித்திரை 14: சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் திருமஞ்சனம்.
ஏப்.28 சித்திரை 15: வராஹ ஜெயந்தி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். கரிநாள்.
ஏப்.29 சித்திரை 16: தேய்பிறை சஷ்டி விரதம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீகேசவப்பெருமாள் கோயிலில் தேர். கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
ஏப்.30 சித்திரை 17: சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீரங்கம் நம்பெருமான், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
மே 1 சித்திரை 18: நடராஜர் அபிஷேகம். திருவோண விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. விரதமிருந்து பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல்.
மே 2 சித்திரை 19: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சன்னதியில் நான்கு கருட சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை.