sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மே 26, 2019 08:36 AM

Google News

ADDED : மே 26, 2019 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிக்கு ஒருமுறையாவது கட்டாயம் செல்லணுமா?

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்

'காசி' என்பதற்கு 'ஒளி' என்பது பொருள். ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டில் முதன்மையானது காசி. சிவபெருமானின் சடையிலிருந்து தோன்றிய கங்காநதி இங்கு ஓடுகிறது. கங்கைக்கரையில் முன்னோருக்கு சிராத்தம் செய்தால், ஆயிரம் மடங்கு புண்ணியம் கிடைக்கும். எனவே கட்டாயம் காசியை தரிசிப்பது அவசியம்.

அம்மை வந்தால் வீட்டில் வேப்பிலை கட்டுவது ஏன்?

கே.கனக விஜயன் மதுரை

அம்மையின் மூலம் வீட்டுக்கு மாரியம்மன் வருவதாக ஐதீகம். இதனை தான் 'அம்மை' எனச் சொல்கிறோம். மாரியம்மனுக்கு உகந்த வேப்பிலையை வாசலிலும், அம்மை கண்டவர்களின் படுக்கையிலும் வைத்திருக்க விரைவில் அம்மை இறங்கி விடும்.

பவுர்ணமியன்று நிலா வந்த பின்பு தான் விரதம் முடியுமா?

ஜெ. மீனா, மதுரை

நிலா வந்த பிறகு கோயில் தரிசனம் செய்வது அவசியம். அதன் பின்னரே விரதத்தை முடிக்க வேண்டும்.

* வீட்டு வாசலில் மாக்கோலம் இடலாமா?

ர.பிரேமா, வேலம்பாளையம்.

தாராளமாக இடலாம். பண்டிகை, வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சி அன்று பூஜையறை, வாசலில் மாக்கோலம் இடுங்கள். மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாள்.

* மனிதனின் தலையெழுத்து எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

சொ.காளிதாசன், பண்ருட்டி

மாணவரின் எதிர்காலத்தை மதிப்பெண் தீர்மானிப்பது போல, முற்பிறவியில் செய்த பாவ, புண்ணிய அடிப்படையில் மனிதனின் தலையெழுத்து அமைகிறது. நம் வாழ்வை அது தீர்மானிக்கிறது.

சுவர்ணாபிஷேகத்தில் பக்தர்களின் நகைகளை சுவாமிக்கு அணிவிப்பது சரிதானா?

ப.விக்னேஸ்வரன், சென்னை

பொன் நாணயங்களை மட்டும் சுவாமிக்கு, அபிஷேகம் செய்வது சுவர்ணாபிஷேகம். இப்போதோ பக்தர்கள் தங்களின் நகைகளை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது.



திதி கொடுக்க ஏற்ற இடம் வீடா? கோயில் குளக்கரையா?

பா.ஜெயஸ்ரீ, கடலுார்.

அமாவாசை, கிரகணம் போன்ற புண்ணிய காலங்களில் செய்யப்படும் தர்ப்பணம், திதிகளை கோயில் குளக்கரையில் செய்யலாம். ஆண்டுதோறும் நடத்தும் முன்னோர் திவசத்தை, வீட்டில் செய்யலாம்.



கோயில் வழிபாட்டு நாளில் துக்கம் கேட்க செல்வது தவறா?

ஆர்.நாகலட்சுமி, அருப்புக்கோட்டை

கிடையாது. கோயில் வழிபாடு முடிந்து, முதலில் வீட்டுக்கு செல்லுங்கள். கோயிலில் பெற்ற பிரசாதங்களை வைத்த பின்னர் துக்க வீட்டுக்கு செல்வதால் தவறில்லை.






      Dinamalar
      Follow us