
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊனத்து இருள்நீங்கிட வேண்டில்
ஞானப் பொருள் கொண்டு அடிபேணும்
தேனொத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலாடுதுறையே.
பொருள்: மயிலாடுதுறையில் வசிக்கும் சிவனே! தேனைப் போன்ற இனிமை மிக்க உன்னை வணங்கினால், அறியாமை இருள் நீங்கும். ஞானம் என்னும் அரும்பொருள் கிடைக்கும்.

