sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜன 19, 2023 11:37 AM

Google News

ADDED : ஜன 19, 2023 11:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சூரியபகவான். மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை தைப்பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம்.

* 'சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் அருள்பவர் சூரியபகவான்.

* சூரியபகவான் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம்தான் உண்டு. அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. இந்த ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறங்கள் உடையவை. இதை ஓட்டும் சாரதி அருணன்.

* ஆதிசங்கரர் நிறுவிய ஷண்மத வழிபாட்டில் சூரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது சவுரமதம்.

* நமது புராணங்கள் ஞானம், பேராற்றல், அழகு ஆகியவற்றின் உறைவிடமாகவும், பல்வேறு வியாதிகளைப் போக்கி, நீண்ட ஆயுள் தருபவராகவும் சூரியனைப் போற்றுகின்றன.

* அருக்கன், ஆதித்தன், கதிரவன், கமல நாயகன், கனலி, ஞாயிறு, பகலவன், பரிதி, பானு, மார்த்தாண்டன், உதயன்,வெங்கதிரோன், வெய்யோன், ரவி, பாஸ்கரன் என்று பல பெயர்கள் சூரியபகவானுக்கு உண்டு.

* உலகில் எழுந்த பல்வேறு நுால்களில் ரிக் வேதம் மிகப் பழமையானது. இதில் சூரிய வழிபாடு குறிக்கப்பட்டிருக்கிறது.

* சங்க இலக்கியத்தில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், சூரியன் கோயில் 'உச்சிக்கிழான் கோட்டம்' என்ற பெயரில் குறிக்கப் பெறுகிறது.

* தை ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அவரது அருளைப் பெறலாம்.

* கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறிவு, கவிதை, கணிதம், சிகிச்சை ஆகியவற்றுக்கான கடவுளாக, அப்பல்லோ என்ற பெயரில் சூரியனை வழிபட்டனர்.

* கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரியதாகும். அன்றைய நாள் சூரிய ஹோரையில் தொடங்கும்.






      Dinamalar
      Follow us