sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

முதியவர்களை மதியுங்கள்

/

முதியவர்களை மதியுங்கள்

முதியவர்களை மதியுங்கள்

முதியவர்களை மதியுங்கள்


ADDED : ஜன 16, 2025 01:37 PM

Google News

ADDED : ஜன 16, 2025 01:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க முதியவர் ஒருவர் வந்தார்.

மத்திய அரசில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் பணியாற்றியவர். சேவை மனப்பான்மை கொண்ட அவர் எண்பது வயதைக் கடந்திருந்தார். உடல்நலக் குறைவால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் இருந்தார். அப்போது மடத்தில் சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடந்தது. மடத்தின் முக்கிய வழிபாடு என்பதால் பீடாதிபதிகள் சிரத்தையுடன் செய்வார்கள். வேறு எதிலும் அவர்களின் கவனம் செல்லாது.

பூஜையைத் தரிசிக்க திரளாக பக்தர்கள் கூடியிருந்தனர். இதனால் அதிகாரி முன்னால் செல்ல முடியாமல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

'பூஜை முடிந்ததும் மஹாபெரியவரை தரிசிக்கலாம்' என காத்திருந்தார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? மகானின் திருப்பார்வையில் பட்டுவிட்டார் அரசு அதிகாரி. உடனே சிப்பந்திகளிடம் அவரை அழைத்து வரச் சொல்லி இருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள்! அதுதான் இல்லை! மஹாபெரியவரே இருக்கையில் இருந்து எழுந்து அவரை நோக்கி நடந்தார்.

ஒட்டு மொத்த கூட்டமும், 'பூஜை முடிந்த கையோடு இப்படி சுவாமிகள் அவசரமாக எங்கே போகிறார்?' என அவரையே பார்த்தனர். அதிகாரியின் உடல்நலத்தை விசாரித்தார். சுவாமிகள் தன்னைத் தேடி வருவார் என எதிர்பார்க்காத அதிகாரி வெலவெலத்துப் போனார். மெள்ள எழ முயன்ற போது 'வேண்டாம்' என சைகையால் மறுத்தார் மஹாபெரியவர்.

கருணைக் கடலான சுவாமிகளைக் கண்டு கண்ணீர் சுரந்தது அவருக்கு. நீண்ட காலமாக அவர் நாட்டுக்காக தொண்டாற்றியதையும், கல்வித் துறையில் செய்த சேவை பற்றியும் அரை மணி நேரமாக பேசினார் மஹாபெரியவர் நின்றபடியே! முதியவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என இதன் மூலம் நமக்கு வழிகாட்டுகிறார் காஞ்சி மஹாபெரியவர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.

* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.

* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.

* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com






      Dinamalar
      Follow us