ADDED : மே 19, 2019 08:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை ஆதிசங்கரர் கங்கை நதிக்கரைக்கு வந்த போது, நாய்களை இழுத்தபடி சுடுகாட்டில் பணிபுரியும் ஒருவர் வந்தார். அவரது மனைவியும் உடனிருந்தார். அவர்களைக் கண்ட சங்கரரின் சீடர்களில் ஒருவர், ''தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் குருநாதர் வரும்வழியில் குறுக்கே செல்ல கூடாது'' எனத் தடுத்தார்.
'எல்லா உயிர்களிலும் கடவுளே குடியிருக்கிறார் என்பது உமக்குத் தெரியாதா'' என அவர் கேட்டார். அதற்கு சங்கரர், ''நீ சொல்வது சரிதானப்பா! மன்னித்துவிடு'' என வேண்டினார். அப்போது சுடுகாட்டில் பணிபுரிபவரும் அவரது மனைவியும் சிவனும் பார்வதியுமாக காட்சியளித்தனர். அப்போது சங்கரர் 'மானிஷா பஞ்சகம்' என்னும் பாடலை இயற்றினார். இதில் மனிதன் பின்பற்ற வேண்டிய தர்மங்கள் இடம் பெற்றுள்ளன.