sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

குழந்தைகளுக்கு அடிபடாத ரகசியம்

/

குழந்தைகளுக்கு அடிபடாத ரகசியம்

குழந்தைகளுக்கு அடிபடாத ரகசியம்

குழந்தைகளுக்கு அடிபடாத ரகசியம்


ADDED : ஜூன் 14, 2019 02:34 PM

Google News

ADDED : ஜூன் 14, 2019 02:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுவாக நடை பயிலும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடுவதில்லை.

இதன் ரகசியம் என்ன?

அசுரனான இரண்யஹசிபு, தன்னையே கடவுள் என உலகிற்கு அறிவித்தான். ஆனால் அவனது மகன் பிரகலாதன், சிறுவயது முதல் விஷ்ணுபக்தனாக வளர்ந்தான். தனது கட்டளையை பிரகலாதன் ஏற்க வேண்டும் என எதிர்பார்த்த இரண்யனின் முயற்சிகள் வீணாயின. கோபம் கொண்ட இரண்யன், மகன் என்றும் பார்க்காமல் மலை உச்சியிலிருந்து உருட்டி விட உத்தரவிட்டான். பணியாளர்களும் உத்தரவை நிறைவேற்றினர். எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணா' என ஜபித்தபடியே மலையில் உருண்டான். அடிபடாமல் அவனை பூமாதேவி காத்ததோடு, '' பிரகலாதா! விரும்பும் வரத்தை கேள்'' என்றும் கேட்டாள்.

''தாயே! என்னை அடிபடாமல் காத்தது போல, என் போன்ற குழந்தைகள் நடை பயிலும் போதும், கீழே தவறி விழும் போதும் தாங்கிப் பிடித்து கொள்'' என்றான்.

அவளும் சம்மதித்தாள். இந்த அரிய வரத்தைப் பெற்ற பிரகலாதனுக்கு நன்றி சொல்வோம்.






      Dinamalar
      Follow us