sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மனதை தொட்ட தள்ளுவண்டி

/

மனதை தொட்ட தள்ளுவண்டி

மனதை தொட்ட தள்ளுவண்டி

மனதை தொட்ட தள்ளுவண்டி


ADDED : ஜூன் 21, 2019 02:50 PM

Google News

ADDED : ஜூன் 21, 2019 02:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான அழைப்பு என் மனதை தொட்டது.

''சார் என்னிடம் காய்கறி வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி வாங்குறதை விட ஐந்து நன்மை அதிகம் கிடைக்கும்.'' என்றதும் அவர் பக்கம் திரும்பினேன்.

காய்கறி வியாபாரி ஒருவர் மனைவியுடன் நின்றிருந்தார். என் மனைவி வாங்க விரும்பிய காய்கறிகள் அத்தனையும் அவரது வண்டியில் இருப்பதைக் கண்டேன். இன்று இவரிடம் வாங்கினால் என்ன? என எண்ணம் எழுந்தது.

''ஐயா! ஐந்து நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா'' எனக் கேட்டேன்.

''என்னிடம் வாங்கும் காய்கறிக்கு ஜி.எஸ்.டி., தர வேண்டாம். நுாறு ரூபாய்க்கு உங்களுக்கு ஐந்து ரூபாய் லாபம். இது முதல் நன்மை.

வாங்கும் காய்கறிகளை கொண்டு செல்ல நான் தரும் பை இலவசம். சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவர் வாங்க மூன்று ரூபாய் தர வேண்டும். இது இரண்டாவது நன்மை. அதுவும் நீங்கள் காசு கொடுத்து வாங்கும் கவரில், அந்த நிறுவனத்தின் விளம்பரம் இருக்கும்.

''சூப்பர் மார்க்கெட்டில் சொல்லும் விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும். எங்களிடம் பேரம் பேசலாம். நுாறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் கொடுப்போம். ஏனெனில் இது எங்கள் வயிற்றுப்பிழைப்பு. 20 ரூபாய் லாபம். சரி தான் என்று தலையசைத்தேன்.

''சார் நான்காவது நன்மை! இந்த காய்கறிகள் இயற்கை விவசாயத்தில் வந்தவை. இதை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை!''

அதுவும் சரி தான் எனத் தோன்றியது.

இப்படி சொல்லிக் கொண்டே, காய்கறிகளை எல்லாம் எடை போட்டுக் கொடுத்தார். கேட்ட பணத்தை நானும் கொடுத்தேன். ''எல்லாம் சரி... ஐந்தாவது நன்மை பற்றி இன்னும் சொல்லவில்லையே'' என்றேன் ஆர்வத்துடன்.

'' இவள் என் மனைவி. கிட்னி செயல் இழந்த இவளுக்கு மருத்துவம் பார்க்க யாரிடமும் நான் கையேந்த விரும்பவில்லை. உங்களை போன்றோர் தரும் பணத்தில் தான் மருத்துவ செலவு செய்யணும். இதற்கான நன்மையை புண்ணியம் என்னும் பெயரில் கடவுள் வழங்குவார். இதுவே ஐந்தாவது நன்மை'' என சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு கண்ணீர் அரும்பியது. நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ள நல்ல உள்ளங்களை சாலையோரங்களில் நீங்களும் சந்திக்கலாம். அவர்களிடம் பொருட்கள் வாங்கினால் அதுவே சமுதாயத்திற்கு செய்யும் உண்மையான தொண்டு!






      Dinamalar
      Follow us