/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பகவத்கீதையும் திருக்குறளும் - 11
/
பகவத்கீதையும் திருக்குறளும் - 11
ADDED : ஜூலை 26, 2024 10:34 AM

தியான பலன்
''தியானம் பற்றி விளக்கமாக சொல்வதாக சொன்னீர்களே... இப்போது அதைச் சொல்றீங்களா'' எனக் கேட்டான் கந்தன்.
''தியானம் செய்யும் முறை பற்றி முன்பே சொன்னேன். நீயும் இப்போது ஐம்புலன்களையும் அடக்கி விட்டாய்
என வைத்துக் கொள். அதன்பின் எதன் மீதும் விருப்போ, வெறுப்போ உண்டாகாது. அப்படியானால் மனதில் அமைதி குடியிருக்கும். அதுவே மகிழ்ச்சியை ஏற்படுத்தும்'' என்றார் ராமசாமி தாத்தா.
இதையே பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையின் 2ம் அத்தியாயம் 64ம் ஸ்லோகத்தில் விளக்குகிறார்.
ராக³த்³வேஷவியுக்தைஸ்துவிஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|
ஆத்மவஸ்²யைர்விதே4யாத்மா
ப்ரஸாத³மதி4க³ச்ச ²தி ||2-64||
விருப்பும், வெறுப்பும் இல்லாமல் ஐம்புலன்களையும் தனக்கு வசப்படுத்தி செயல்படுபவன் நிம்மதியும், ஆறுதலும் அடைவான்.
திருவள்ளுவர் 352 ம் திருக்குறளில் இதே கருத்தை வலியுறுத்துகிறார். இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
புலன்களை கட்டுப்படுத்தினால் மெய் உணர்வு உண்டாகும். அப்போது விருப்பு, வெறுப்பு, அறியாமை, குற்றம் விலகும். இன்பம் உண்டாகும்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554