sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கர்வால் கமலேஷ்வர்

/

கர்வால் கமலேஷ்வர்

கர்வால் கமலேஷ்வர்

கர்வால் கமலேஷ்வர்


ADDED : பிப் 20, 2025 02:03 PM

Google News

ADDED : பிப் 20, 2025 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர்கண்ட் மாநிலம் கர்வால் பகுதியில் உள்ளது கமலேஷ்வர் மகாதேவ் என்னும் சிவன் கோயில்.

இங்கு கார்த்திகை மாத சதுர்த்தசியன்று இரவில் விளக்கை கையில் ஏந்தியபடி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். அசுரர்களை அழிக்க மகாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரம் தேவைப்பட்டது.

அதற்காக இங்கு தவமிருந்து சிவபெருமானை பூஜித்தார். அப்போது ஆயிரம் தாமரை மலர்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய தயாரானார். ஆனால் எதிர்பாராத விதமாக அதில் ஒரு மலர் காணாமல் போனது.

உடனே தாமரை போன்ற தன் கண்ணையே சிவனுக்கு சமர்ப்பிக்கலாம் என பிடுங்க முயன்றார். அப்போது, 'உம் பக்தியை சோதிக்கவே இப்படி செய்தோம்' என அசரீரி கேட்டது.

சிவனின் திருவிளையாடலை எண்ணி கண்ணீர் சிந்திய மகாவிஷ்ணுவின் முன் சுதர்சன சக்கரம் தோன்றியது. அதைப் பெற்றுக் கொண்ட மகாவிஷ்ணு போரில் அசுரர்களை அழித்தார். தாமரை (கமலம்) மலரைக் கொண்டு வழிபட்டதால் 'கமலேஷ்வரர்' என சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. இமயமலையில் உள்ள ஐந்து மகேஷ்வர் பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

பார்வதியை சிவன் திருமணம் செய்த நாளான மகாசிவராத்திரி இங்கு முக்கிய விழா. இந்நாளில் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகமும், பழ நைவேத்யமும் செய்கின்றனர். வசந்த பஞ்சமியை ஒட்டி வரும் அச்ரஸ் சப்தமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று கமலேஷ்வரருக்கு 52 வகை உணவுகள் நைவேத்யம் செய்யப்படுகிறது. சரஸ்வதி, கங்கை, அன்னபூரணிக்கு தனி சன்னதிகள் உள்ளன.



எப்படி செல்வது:

ரிஷிகேஷ் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 104 கி.மீ.,

டேராடூன் விமான நிலையத்தில் இருந்து 151 கி.மீ.,

விசேஷ நாள்: மகாசிவராத்திரி, அச்ரஸ் சப்தமி

நேரம்: அதிகாலை 4:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 94123 24526, 90456 42459

அருகிலுள்ள கோயில்: கேதார்நாத் கேதாரீஸ்வரர் 120 கி.மீ., (மோட்சம் பெற...)

நேரம்: காலை 6:00 - மதியம் 3:00 மணி

தொடர்புக்கு: 01364 - 267 228, 263 231






      Dinamalar
      Follow us