sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

செவ்வாய் தோஷம் தீர...

/

செவ்வாய் தோஷம் தீர...

செவ்வாய் தோஷம் தீர...

செவ்வாய் தோஷம் தீர...


ADDED : டிச 15, 2023 11:12 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்ஜென்மத்தில் செய்த தீய செயல்களே ஒருவருக்கு தோஷமாக மாறுகின்றன. அதில் செவ்வாய்தோஷமும் ஒன்று. சகோதர, சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை அபகரிக்கும் போதும், ஓர் இடத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும் இத்தோஷம் ஒருவருக்கு ஏற்படுகிறது. இந்த தோஷம் தீர மதுரை சிலைமான் அருகே பசியாபுரத்தில் அருள்புரியும் சடாச்சர முருகனை தரிசியுங்கள்.

கோயிலின் உள்ளே சென்றதும் கல்யாணகோலத்துடன் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம். பின் அரசமரம், வேப்பமரம் இணைந்துள்ள பகுதியில் கல்யாண விநாயகர் காட்சி தருகிறார்.

இவர்களை கடந்து சன்னதிக்குள் நுழைந்தால் சடாச்சர முருகன் புன்முறுவலுடன் இருக்கிறார். இருந்தாலும் அவரது முகத்தில் ஆக்ரோஷத்தை காணலாம். இவரிடம் வேண்டினால் செவ்வாய் தோஷம் தீரும்.

பின் பிரகாரத்தை வலம் வந்தால் ஆதிபராசக்தி, மகா விஷ்ணு, தட்சிணாமூர்த்தி அக்னி வீரபத்திரன், லிங்கோத்பவர், துர்கை, அனுமன், ஐயப்பன், சங்கிலிக்கருப்பன், கால பைரவரை காணலாம். நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோயில் எதிரே உள்ள நாகம்மாவை வழிபடலாம்.

குருவான முருகன்

குழந்தை, வீரன், சேனாதிபதி என முருகனுக்கு பல பெருமை இருந்தாலும் அவர் அதற்கும் மேலாக குருவாக போற்றப்படுகிறார். உலக உயிர்களுக்கு உபதேசம் கொடுத்து மோட்சம் பெற செய்கிறார். இதனால் அருணகிரிநாதர் 'குருவாய் அரர்க்கும் உபதேசம் வைத்த' என்று சொல்கிறார். தனது தந்தை பரம ஞான மூர்த்தியான சிவபெருமானுக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமி இவர். இதனால் 'ஞான பண்டித சுவாமி' என்ற அடைமொழி உண்டானது.

எப்படி செல்வது

மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் 9 கி.மீ.,

விசேஷ நாள்: வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தைப்பூசம், பங்குனி உத்திரம்

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 97516 28043

அருகிலுள்ள தலம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ௧௧ கி.மீ., (மன பலம் அதிகரிக்க...)

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 04575 - 272 411






      Dinamalar
      Follow us