
அனைவரும் சுற்றுலா செல்லும் காலம் கோடைக்காலம். அதிலும் அக்னி நட்சத்திர சமயத்தில் கண் நோய், அம்மை போன்ற நோய்கள் ஏற்படும். மதுரை வண்டியூர் மாரியம்மன் இந்நோய்களை தீர்க்கும் கருணை தெய்வம்.
முன்பு காவல் தெய்வமான துர்கையம்மன் கோயில் மதுரை நகரின் கிழக்கு எல்லையில் இருந்தது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் போருக்கு செல்லும் முன் இங்கு வழிபடுவது வழக்கம். அதைப்போல் மழை வரம் வேண்டி இவளை வழிபட்டுள்ளனர்.
காலப்போக்கில் இவள் மாரியம்மனாக மாறினாள். இதுதான் கோயிலின் வரலாறு.
இங்கு அம்மன் சிரித்த முகத்துடன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியிருக்கிறாள். இடது கால் தொங்கவிட்டும், வலதுகால் மடித்த நிலையிலும் இருக்கிறாள். காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.
சுபநிகழ்ச்சி நடத்துவோர் பூக்கட்டி அம்மனிடம் உத்தரவு கேட்கின்றனர். இங்கு தரப்படும் தீர்த்தத்தை பருகினால் அம்மை நோய் குணமாகும். கண் நோய் தீர வெள்ளியால் ஆன கண்மலர் காணிக்கை செலுத்துகின்றனர். தோல் வியாதி தீர உப்பு, மிளகு செலுத்தி வழிபடுகின்றனர். சன்னதியில் பேச்சியம்மனும், அரசமரத்தின் கீழே விநாயகரும் உள்ளனர்.
எப்படி செல்வது: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடி வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி.
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0452 - 231 1475
அருகிலுள்ள தலம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் 23 கி.மீ., (எதிரி தொல்லை தீர...)
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 04575 - 272 411