sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மங்களூரு மங்களாம்பிகை

/

மங்களூரு மங்களாம்பிகை

மங்களூரு மங்களாம்பிகை

மங்களூரு மங்களாம்பிகை


ADDED : மே 31, 2024 10:26 AM

Google News

ADDED : மே 31, 2024 10:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநிலம் மங்களூரு மங்களாம்பிகை தன்னை நாடி வருவோருக்கு திருமண யோகம், சுமங்கலி வாழ்வு தருகிறாள். கண், தோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கிறாள்.

துளு நாட்டை ஆண்ட அந்தகாசுரன் ஆணவத்தால் தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தினான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தனர். பரசுராமராக அவதரித்த அவர் அசுரனைக் கொன்றார். அசுரனின் நாட்டை கஷ்யப மகரிஷியிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்ய ஓரிடத்தைக் காட்டும்படி சிவனிடம் வேண்டினார். கடல் அரசனிடம் கேட்கச் சொன்னார் சிவன். ஆனால் கடல் அரசனோ இடம் தரவில்லை.

கோபத்தில் பரசுராமர் கோடரியை வீச, அது நேத்திரவதி ஆறும், பல்குனி ஆறும் இணையும் இடத்தில் விழுந்தது. அந்த இடத்தில் கடல் உள்வாங்கி அம்மன் வடிவம் பொறித்த சிவசக்தி லிங்கம் ஒன்று கிடைத்தது. 'இதுவே தவம் செய்ய சரியான இடம்' என அசரீரி கேட்க, பரசுராமர் தவம் செய்ததோடு சக்திலிங்கத்திற்கு கோயிலும் கட்டினார். அம்மனுக்கு 'மங்களாதேவி' எனப் பெயர் சூட்டினார். முன்பு 'மங்களாபுரம்' தற்போது மங்களூரு எனப்படுகிறது.

இக்கோயிலில் காலையில் நிர்மால்ய தரிசனத்தின் போது அம்மனின் சிவலிங்க வடிவத்தை தரிசிக்கலாம். வெள்ளி அன்று தரிசிப்பது விசேஷம்.

கல்வியில் மேம்பட இங்கு வித்யாரம்ப வழிபாடு நடக்கிறது.

கோயில் பிரகாரத்தில் அரச மரத்தடி நாகராஜர் சன்னதி உள்ளது. நாகருக்கு பால் அபிஷேகம் செய்தால் ராகு, கேது தோஷம் தீரும். விளைச்சல் அதிகரிக்க நிர்மால்ய தீர்த்த தொட்டியில் தென்னங்கன்றுகளை வைத்து விவசாயிகள் வழிபடுகின்றனர்.

எப்படி செல்வது: மங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 3 கி.மீ.,

விசேஷ நாள்: நவராத்திரி, திருக்கார்த்திகை லட்ச தீபம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 0824 - 242 5476

அருகிலுள்ள தலம்: கொல்லுார் மூகாம்பிகை அம்மன் கோயில் 130 கி.மீ., (கல்வியில் சிறக்க...)

நேரம்: அதிகாலை 5:00 - 1:30 மணி; மதியம் 3:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 94481 77892, 08254 - 258 245






      Dinamalar
      Follow us