sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே

/

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே


ADDED : ஜூன் 23, 2023 11:40 AM

Google News

ADDED : ஜூன் 23, 2023 11:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் பழகியிருப்போம். பல்தேய்ப்பது, குளிப்பது சாப்பிடுவது, படிப்பது என பல விஷயங்களை விதவிதமான நபர்களின் மூலம் அறிந்திருப்போம். அப்பா, அம்மா பள்ளிக்கூட ஆசிரியர் நண்பர் என யார் வேண்டுமானாலும் அந்த ஆசிரியராக இருக்கலாம். இப்படி பல விஷயங்களை கற்பதைப்போல் வாழ்க்கை என்பது என்ன என்பதையும் அறிய வேண்டும் அல்லவா. அதை யார் நமக்கு சொல்லித்தருவார். அவர்தான் குரு. அவர் எங்கே இருக்கிறார் திருவண்ணாமலை செங்கம் சாலையில் தட்சிணாமூர்த்தியாக உங்களுக்காக காத்திருக்கிறார்.

கிரிவலம் செல்லும் பாதையில் சிறிய கோயிலில், சின்னஞ்சிறு அகல்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கிறார் தட்சிணாமூர்த்தி. அவரைக் கண்டதும் ஞானக்கீற்று நமக்குள் மின்னலாய் ஊடுருவும். அது சரி. ஞானம் என்றால் என்ன. இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் கேட்டிருப்போம். அதுவும் அறிவுதானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் ஞானம் என்பது அதைத்தாண்டியது. ஆம். நாம் எங்கிருந்து வந்தோம்.

இறப்பிற்கு பின் நாம் எங்கே செல்வோம் என்ற கேள்விகளுக்கு விடை தெரிவதுதான் ஞானம். அந்த ஞானத்தையும் இவரால் வழங்க முடியும். இதை வைத்து நாம் என்ன செய்வது என்ற கேள்வி மனதில் எழக்கூடும். உண்மையில் இந்த ஞானத்தால் வாழ்க்கை வளமாகும். மனம் தெளிவாகும். அமைதியும், பொறுமையும்தான் ஞானத்தின் முதல்படி. இந்த இரண்டை கைக்கொண்டால் பேச்சின் வேகம் குறைந்துவிடும். எதைப் பற்றியும் நிதானமாக யோசிப்பீர்கள். இத்தலத்திற்கு வந்தால் ஞானம் பொங்குவதை உணர முடியும். மொத்தத்தில் உங்களையே உங்களால் உணர முடியும். வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களும் கிடைக்கும்.



எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,

விசேஷ நாள்: வியாழன்

தொடர்புக்கு: 04175 - 252 438; 254 425

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி

அருகிலுள்ள தலம்: திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் கோயில்

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94875 83557, 04175 - 237 567






      Dinamalar
      Follow us