
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் ரெங்கமன்னார் 'அ'காரம், ஆண்டாள் 'ம'காரம், கருடாழ்வார் 'உ'காரம் என இம்மூவரும் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர். திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது பேண்ட், சட்டை அணிந்து வருவர். இது இன்று, நேற்று நடக்கும் வழக்கமல்ல. பெருமாள், ஆண்டாளை திருமணம் செய்தபோதே, பேண்ட், சட்டை அணிந்து சென்றார். இதன் அடிப்படையில் இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் மட்டும் இவர் வேஷ்டி அணிந்திருப்பார். பொதுவாக பெருமாள் கோயில்களில் கருடாழ்வார், சுவாமி சந்நிதி எதிரே அவரை வணங்கியபடி இருப்பார். ஆனால், இங்கு பெருமாள் அருகிலேயே இருக்கிறார்.

